< Back
டென்னிஸ்
டென்னிஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நம்பர் 1 வீரர் ஜானிக் சினெர் காலிறுதிக்கு முன்னேற்றம்
|3 Sept 2024 10:58 AM IST
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு ஜானிக் சினெர் முன்னேறியுள்ளார்.
நியூயார்க்,
'கிரான்ட்ஸ்லாம்' அந்தஸ்து கொண்ட அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று காலை நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் நம்பர் 1 வீரரான ஜானிக் சினெர் (இத்தாலி), அமெரிக்க வீரரான டாமி பால் உடன் பலப்பரீட்சை நடத்தினார்.
இதில் சிறப்பாக செயல்பட்ட சினெர் 7-6, 7-6 மற்றும் 6-1 என்ற நேர் செட் கணக்கில் டாமி பாலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இவர் காலிறுதியில் மெட்வதேவ் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.