< Back
டென்னிஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ்; நம்பர் 1 மற்றும் நடப்பு சாம்பியன் இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி...!!

image courtesy;AFP

டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்; நம்பர் 1 மற்றும் நடப்பு சாம்பியன் இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி...!!

தினத்தந்தி
|
4 Sept 2023 5:21 PM IST

நடப்பு சாம்பியனான இகா ஸ்வியாடெக்கை வீழ்த்தி ஜெலினா ஓஸ்டபென்கோ காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

நியூயார்க்,

'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் மற்றும் நம்பர் 1 வீராங்கனையான போலந்து நாட்டை சேர்ந்த இகா ஸ்வியாடெக் லாட்விய நாட்டை சேர்ந்த ஜெலினா ஓஸ்டபென்கோ உடன் மோதினார்.

இதில் முதல் செட்டை கைப்பற்றிய ஸ்வியாடெக் அடுத்த இரு செட்களில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 1 மணி நேரம் 48 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் ஜெலினா 3-6, 6-3 மற்றும் 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். காலிறுதியில் அவர் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

இந்த தோல்வியின் மூலம் நடப்பு சாம்பியன் ஸ்வியாடெக் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.

மேலும் செய்திகள்