< Back
டென்னிஸ்
டென்னிஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நம்பர் 1 வீரர் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
|31 Aug 2024 7:04 AM IST
சினெர் 3-வது சுற்று ஆட்டத்தில் கிறிஸ்டோபர் ஓ'கானல் உடன் மோத உள்ளார்.
நியூயார்க்,
ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 'நம்பர் 1' வீரரான ஜானிக் சினெர் (இத்தாலி), அலெக்ஸ் மிசெல்சென் (அமெரிக்கா) உடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதலே சிறப்பாக செயல்பட்ட சினெர் 6-4, 6-0, 6-2 என்ற நேர்செட்டில் மிசெல்செனை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இவர் தனது 3-வது சுற்று ஆட்டத்தில் கிறிஸ்டோபர் ஓ'கானல் மோத உள்ளார்.