< Back
டென்னிஸ்
டென்னிஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்ட நவோமி ஒசாகா
|30 Aug 2024 2:47 PM IST
நவோமி ஒசாகா (ஜப்பான்), கரோலினா முச்சோவா (செக் குடியரசு) உடன் மோதினார்.
நியூயார்க்,
பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான்), கரோலினா முச்சோவா (செக் குடியரசு) உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நவோமி ஒசாகா 3-6, 6-7 (5-7) என்ற செட் கணக்கில் கரோலினா முச்சோவாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார். இந்த தோல்வியின் மூலம் ஒசாகா 2வது சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறினார்.