< Back
டென்னிஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ்; ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மெத்வதேவ் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்..!!

image courtesy; AFP

டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்; ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மெத்வதேவ் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்..!!

தினத்தந்தி
|
7 Sept 2023 10:47 AM IST

மெத்வதேவ் காலிறுதி சுற்றில் ஆன்ட்ரே ரூப்லேவை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நியூயார்க்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டி ஒன்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், சக நாட்டவரான ஆன்ட்ரே ரூப்லெவுடன் மோதினார்.

இதில் மெத்வதேவ் 6-4, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தார். இவர் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் கார்லஸ் அல்காரசுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

மேலும் செய்திகள்