< Back
டென்னிஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கார்லஸ் அல்காரஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மெத்வதேவ்...!

Image Courtesy: @usopen

டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கார்லஸ் அல்காரஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மெத்வதேவ்...!

தினத்தந்தி
|
9 Sept 2023 9:27 AM IST

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச் - மெத்வதேவ் மோத உள்ளனர்.

நியூயார்க்,

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை எட்டிய இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் கார்லஸ் அல்காரஸ் - மெத்வதேவ் ஆகியோர் மோதினர்.

இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 7-6 (7-3) என போராடி கைப்பற்றிய மெத்வதேவ் அடுத்த செட்டை 6-1 என எளிதில் கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து 3வது செட்டை 6-3 என அல்காரஸ் கைப்பற்றினார். இதையடுத்து 4வது செட்டில் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மெத்வதேவ் 6-3 என அல்காரஸை வீழ்த்தினார்.

இறுதியில் 7-6 (7-3) , 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் அல்காரஸை வீழ்த்தி மெத்வதேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் மெத்வதேவ் - ஜோகோவிச் மோத உள்ளனர்.

மேலும் செய்திகள்