< Back
டென்னிஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: மெட்வதேவ் காலிறுதிக்கு முன்னேற்றம்..!!

 image courtesy;AFP

டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: மெட்வதேவ் காலிறுதிக்கு முன்னேற்றம்..!!

தினத்தந்தி
|
5 Sept 2023 4:09 PM IST

டேனியல் மெட்வதேவ் 4-வது சுற்று ஆட்டத்தில் அலெக்ஸ் டி மினாரை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

நியூயார்க்,

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் ஒன்றில் 3-ம் நிலை வீரரான டேனில் மெட்வதேவ் (ரஷியா) ஆஸ்திரேலியாவை சேர்ந்த அலெக்ஸ் டி மினார் உடன் மோதினார்.

இதில் முதல் செட்டை இழந்த மெட்வதேவ் பின்னர் எழுச்சி பெற்று அடுத்தடுத்த செட்டுகளை கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்த ஆட்டத்தில் மெட்வதேவ் 2-6, 6-4, 6-1 மற்றும் 6-2 என்ற செட் கணக்கில் அலெக்ஸ் டி மினாரை தோற்கடித்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

மெட்வதேவ் காலிறுதியில் தரவரிசையில் 8-வது இருக்கும் சக நாட்டை சேர்ந்த ஆந்த்ரே ரூப்லெவை சந்திக்கிறார். ரூப்லெவ் 4-வது சுற்று ஆட்டத்தில் 6-3. 3-6. 6-3. 6-4 என்ற கணக்கில் இங்கிலாந்து வீரர் டிராப்பரை வீழ்த்தினார்.

மேலும் செய்திகள்