< Back
டென்னிஸ்
டென்னிஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: மெத்வதேவ் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
|30 Aug 2024 9:51 PM IST
2வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷிய வீரர் மெத்வதேவ் , ஹங்கேரி வீரர் பேபியன் மரோசனை எதிர்கொண்டார்.
நியூயார்க்,
'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷிய வீரர் மெத்வதேவ் , ஹங்கேரி வீரர் பேபியன் மரோசனை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய மெத்வதேவ் 6-3,6-2, 7(7)-6(5) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.