< Back
டென்னிஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ்; இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜெசிகா பெகுலா

Image Courtesy: AFP

டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்; இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜெசிகா பெகுலா

தினத்தந்தி
|
6 Sept 2024 10:43 AM IST

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.

நியூயார்க்,

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, செக்குடியரவின் கரோலினா முச்சோவா உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 1-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த ஜெசிகா பெகுலா, ஆட்டத்தின் அடுத்தடுத்த செட்களை 6-4, 6-2 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். இறுதியில் இந்த ஆட்டத்தில் 1-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் ஜெசிகா பெகுலா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

வரும் 8ம் தேதி நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஜெசிகா பெகுலா, பெலாரசின் அரினா சபலென்கா உடன் மோத உள்ளார்.

மேலும் செய்திகள்