< Back
டென்னிஸ்
டென்னிஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ்; ஜன்னிக் சின்னெர் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
|7 Sept 2024 8:21 AM IST
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னெர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
நியூயார்க்,
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இறுதிகட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இத்தாலியின் ஜன்னிக் சின்னெர், பிரிட்டனின் ஜாக் டிராப்பர் உடன் மோதினார்.
இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சின்னெர் 7-5, 7-6 (7-3), 6-2 என்ற செட் கணக்கில் ஜாக் டிராப்பரை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் ஜன்னிக் சின்னெர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.