< Back
டென்னிஸ்
டென்னிஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜானிக் சினெர் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
|29 Aug 2024 6:46 AM IST
சினெர் தனது அடுத்த ஆட்டத்தில் அலெக்ஸ் மைக்கேல்சன் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
நியூயார்க்,
ஆண்டின் இறுதி 'கிராண்ட்ஸ்லாம்' ஆன அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் 'நம்பர் ஒன்' வீரர் ஜானிக் சினெர் (இத்தாலி) தகுதி நிலை வீரர் அமெரிக்காவின் மெக்டொனால்டு உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை இழந்து அதிர்ச்சி கண்ட சினெர், அதன்பின் எழுச்சி பெற்று அடுத்த 3 செட்டுகளை கைப்பற்றி வெற்றி பெற்றார். சினெர் இந்த ஆட்டத்தில் 2-6, 6-2, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இவர் தனது 2-வது சுற்று ஆட்டத்தில் அலெக்ஸ் மைக்கேல்சன் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.