< Back
டென்னிஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் இகா ஸ்வியாடெக் சாம்பியன்..!

image courtesy: US Open Tennis twitter

டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் இகா ஸ்வியாடெக் சாம்பியன்..!

தினத்தந்தி
|
11 Sept 2022 4:37 AM IST

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

நியூயார்க்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த இறுதி போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், 5-ம் நிலை வீராங்கனையான துனிசியாவைச் சேர்ந்த ஒன்ஸ் ஜபீருடன் மோதினார்.

இந்த போட்டியில் இகா ஸ்வியாடெக், 6-2, 7-6 (7-5) என்ற நேர் செட் கணக்கில் ஒன்ஸ் ஜபீரை எளிதாக வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

மேலும் செய்திகள்