< Back
டென்னிஸ்
US Open Tennis; Iga Sviatek advances to quarter-finals

Image Courtesy: AFP 

டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்; இகா ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
3 Sept 2024 2:46 PM IST

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

நியூயார்க்,

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்று (ரவுண்ட் ஆப் 16) ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், ரஷியாவின் லியுட்மிலா சாம்சோனோவா உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட இகா ஸ்வியாடெக் 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் லியுட்மிலா சாம்சோனோவாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா உடன் மோத உள்ளார்.

மேலும் செய்திகள்