< Back
டென்னிஸ்
டென்னிஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்...!
|9 Sept 2023 8:23 AM IST
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
நியூயார்க்,
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அமெரிக்காவின் பென் ஷெல்டன் உடன் மோதினார்.
இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் 6-3, 6-2, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் பென் ஷெல்டனை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.