அமெரிக்க ஓபன் டென்னிஸ்; 4வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்ட கோகோ காப்
|அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.
நியூயார்க்,
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்று (ரவுண்ட் ஆப் 16) ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான கோகோ காப், சகநாட்டவரான எம்மா நவரோ உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் எம்மா நவரோவும், 2வது செட்டை 6-4 என்ற புள்ளிக்கணக்கில் கோகோ காப்பும் கைப்பற்றினர். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட்டில் அபாரமாக செயல்பட்ட எம்மா நவரோ 6-3 என்ற புள்ளிக்கணக்கில் கோகோ காப்பை வீழ்த்தினார்.
இறுதியில் இந்த ஆட்டத்தை 6-3, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் எம்மா நவரோ கைப்பற்றினார். முன்னணி வீராங்கனையான கோகோ காப் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.