< Back
டென்னிஸ்
டென்னிஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கரோலின் வோஸ்னியாக்கி 4-வது சுற்றுக்கு தகுதி
|2 Sept 2024 6:42 AM IST
வோஸ்னியாக்கி 4-வது சுற்றில் பீட்ரிஸ் ஹடாத்மாயா உடன் மோத உள்ளார்.
நியூயார்க்,
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), ஜெசிகா பொன்சேட் (பிரான்ஸ்) உடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய வோஸ்னியாக்கி 6-3 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் ஜெசிகா பொன்சேட்டியை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இவர் 4வது சுற்றில் பீட்ரிஸ் ஹடாத்மாயா உடன் மோத உள்ளார்.