< Back
டென்னிஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ்; கலப்பு இரட்டையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறிய போபண்ணா இணை

கோப்புப்படம்

டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்; கலப்பு இரட்டையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறிய போபண்ணா இணை

தினத்தந்தி
|
3 Sept 2024 9:43 PM IST

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

நியூயார்க்,

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த தொடரில் இன்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்னா- இந்தோனேசியாவின் அல்டிலா சுட்ஜியாடி இணை, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் - செக் குடியரசின் பார்போரா கிரெஜிகோவா உடன் மோதியது.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் போபண்ணா இணை 7-6 (7-4), 2-6, 10-7 என்ற செட் கணக்கில் மேத்யூ எப்டன் இணையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் போபண்ணா இணை, அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்ட் - டொனால்ட் யங் இணையை எதிர்கொள்ள உள்ளது.

மேலும் செய்திகள்