< Back
டென்னிஸ்
டென்னிஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ்; ஆண்கள் இரட்டையர் பிரிவில் போபண்ணா இணை தோல்வி
|2 Sept 2024 6:04 PM IST
ஆண்கள் இரட்டையர் பிரிவின் 4வது சுற்று ஆட்டத்தில் போபண்ணா - மேத்யூ எப்டன் இணை தோல்வி கண்டது.
நியூயார்க்,
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் 4வது சுற்று (ரவுண்ட் ஆப் 16) ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா) - மேத்யூ எப்டன் (ஆஸ்திரேலியா) இணை, அர்ஜென்டினாவின் ஆண்ட்ரேஸ் மோல்டெனி - மேக்சிமோ ஹோன்ஸ்சலெஸ் இணையுடன் மோதியது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்ட போபண்ணா இணை 1-6, 5-7 என்ற செட் கணக்கில் ஆண்ட்ரேஸ் மோல்டெனி - மேக்சிமோ ஹோன்ஸ்சலெஸ் இணையிடம் தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறியது.