< Back
டென்னிஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ்;  இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்..!!

image courtesy; AFP

டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்; இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்..!!

தினத்தந்தி
|
4 Sept 2023 10:43 AM IST

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

நியூயார்க,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 3-வது சுற்று போட்டி ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி- அமெரிக்காவின் ஜூலியன் கேஷ், ஹென்றி பேட்டன் ஜோடியுடன் மோதியது.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் போபண்ணா ஜோடி 6-4, 6-7 (5-7), 7-6 (10-6) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

மேலும் செய்திகள்