< Back
டென்னிஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: மேடிசன் கீஸை வீழ்த்தி அரினா சபலென்கா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்..!

Image Courtesy: @usopen

டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: மேடிசன் கீஸை வீழ்த்தி அரினா சபலென்கா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்..!

தினத்தந்தி
|
8 Sept 2023 11:24 AM IST

பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் அரினா சபலென்கா - கோகோ காப் மோத உள்ளனர்.

நியூயார்க்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் அரினா சபலென்கா, அமெரிக்காவின் மேடிசன் கீஸை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் 6-0 என சபலென்காவுக்கு அதிர்ச்சி அளித்த கீஸ் அடுத்த இரு செட்களில் 7-6, 7-6 என்ற செட் கணக்கில் சபலென்காவிடம் தோல்வி கண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார். இதையடுத்து பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் அரினா சபலென்கா - கோகோ காப் மோத உள்ளனர்.

மேலும் செய்திகள்