< Back
டென்னிஸ்
டென்னிஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரினா சபலென்கா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்..!!
|3 Sept 2023 12:09 PM IST
3-வது சுற்று ஆட்டத்தில் சபலென்கா, கிளாரா புரெலை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
நியூயார்க்,
'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டத்தில் டென்னிஸ் தரவரிசையில் 2ஆம் நிலை வீராங்கனையான பெலாரஸ் நாட்டை சேர்ந்த அரினா சபலென்கா பிரெஞ்சு வீராங்கனை கிளாரா புரெல் உடன் மோதினார்.
இதில் 6-1 மற்றும் 6-1 என்ற நேர் செட் கணக்கில் கிளாரா புரெலை எளிதில் வீழ்த்தி சபலென்கா 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். நம்பர் 1 இடத்திற்கு முன்னேறும் முனைப்பில் விளையாடி வரும் சபலென்கா அடுத்த போட்டியில் ரஷிய வீராங்கனை டாரியா கசட்கினா உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
இதில் நம்பர் 1 வீராங்கனையான இகா ஸ்வியாடெக் தனது 4-வது சுற்று போட்டியில் ஜலேனா ஆஸ்டபென்கோ உடன் மோத உள்ளார்.