< Back
டென்னிஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கலப்பு இரட்டையர் பிரிவில் அன்னா டேனிலினா இணை சாம்பியன்...!

Image Courtesy: @usopen

டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கலப்பு இரட்டையர் பிரிவில் அன்னா டேனிலினா இணை சாம்பியன்...!

தினத்தந்தி
|
10 Sept 2023 11:20 AM IST

கலப்பு இரட்டையர் பிரிவில் அன்னா டேனிலினா-ஹரி ஹெலியோவாரா இணை சாம்பியன் பட்டம் வென்றது.

நியூயார்க்,

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் அன்னா டேனிலினா - ஹரி ஹெலியோவாரா இணை ஆஸ்டின் கிராஜிசெக் - ஜெசிகா பெகுலா இணையை எதிர்கொண்டனர்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய அன்னா டேனிலினா - ஹரி ஹெலியோவாரா இணை 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஆஸ்டின் கிராஜிசெக் - ஜெசிகா பெகுலா இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

மேலும் செய்திகள்