< Back
டென்னிஸ்
டென்னிஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அல்காரஸ், மெட்விடேவ் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
|1 Sept 2023 3:04 PM IST
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் அல்காரஸ், மெட்விடேவ் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
நியூயார்க்,
'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் 'நம்பர் ஒன்' வீரரும், நடப்பு சாம்பியனுமான ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ், தென் ஆப்பிரிக்க வீரர் லாயிட் ஹாரிஸ் உடன் மோதினார். இந்த போட்டியில் அல்காரஸ் 6-3, 6-1, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ஹாரிசை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு இரண்டாவது சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷியாவைச் சேர்ந்த 3-ம் நிலை வீரர் டேனில் மெட்விடேவ், ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ்டோபருடன் மோதினார். இந்த போட்டியில் மெட்விடேவ், 6-2, 6-2, 6-7 (6-8), 6-2 என்ற செட் கணக்கில் கிறிஸ்டோபரை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.