< Back
டென்னிஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ்; அலெக்ஸ் டி மினார் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

image courtesy; AFP

டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்; அலெக்ஸ் டி மினார் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
1 Sep 2024 4:19 PM GMT

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

நியூயார்க்,

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், பிரிட்டனின் டேன் எவான்ஸ் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் டி மினார் 6-3, 6-7 (4-7), 6-0, 6-0 என்ற செட் கணக்கில் டேன் எவான்ஸை வீழ்த்தி 4வது சுற்றுக்கு (ரவுண்ட் ஆப் 16) முன்னேறினார். நாளை நடைபெறும் 4வது சுற்று ஆட்டத்தில் டி மினார், சகநாட்டவரான ஜோர்டான் தாம்சன் உடன் மோத உள்ளார்.

மேலும் செய்திகள்