< Back
டென்னிஸ்
டென்னிஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி
|30 Aug 2024 11:52 AM IST
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் 2-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்து அல்காரஸ் வெளியேறினார்.
நியூயார்க்,
'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி இன்று காலை நடந்த ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் 3-ம் நிலை வீரரும், விம்பிள்டன் சாம்பியனுமான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), 74-ம் நிலை வீரரான போடிக் வான் டி (நெதர்லாந்து) உடன் பலப்பரீட்சை நடத்தினார்.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய போடிக் வான் டி 6-1, 7-5 மற்றும் 6-4 என்ற நேர் செட் கணக்கில் அல்காரசுக்கு அதிர்ச்சி அளித்து 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இந்த அதிர்ச்சி தோல்வியின் மூலம் நடப்பு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து அல்காரஸ் வெளியேறினார்.