< Back
டென்னிஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ்; அல்காரஸ் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

Image : AFP 

டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்; அல்காரஸ் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
28 Aug 2024 10:58 AM GMT

ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் - ஆஸ்திரேலிய வீரர் லிது ஆகியோர் மோதினர்.

நியூயார்க்,

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. . இதில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் - ஆஸ்திரேலிய வீரர் லிது ஆகியோர் மோதினர்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய அல்காரஸ் 6-2, 4-6, 6-3 ,6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மேலும் செய்திகள்