< Back
டென்னிஸ்
அமெரிக்க ஓபன் - முதல் சுற்றில் சிமோனா ஹாலெப் அதிர்ச்சி தோல்வி
டென்னிஸ்

அமெரிக்க ஓபன் - முதல் சுற்றில் சிமோனா ஹாலெப் அதிர்ச்சி தோல்வி

தினத்தந்தி
|
30 Aug 2022 6:22 AM IST

உலகின் 7-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவைச் சேர்ந்த சிமோனா ஹாலெப், உக்ரைன் வீராங்கனையிடம் தோற்று வெளியேறினார்.

வாஷிங்டன்,

அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

உலகின் 7-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவைச் சேர்ந்த சிமோனா ஹாலெப், உக்ரைன் வீராங்கனை டரியா ஸ்னைகுரை சந்தித்தார். முதல் செட்டை கைவிட்ட ஹாலெப், இரண்டாம் செட்டை தனதாக்கினார்.

ஆனால் டரியா அதிரடியாக ஆடி மூன்றாம் செட்டை கைப்பற்றினார். இறுதியில், சிமோனா ஹாலெப் 2- 6, 6- 0, 4- 6 என்ற கணக்கில் தோற்று, தொடரில் இருந்து அதிர்ச்சிகரமாக வெளியேறினார்.

மேலும் செய்திகள்