< Back
டென்னிஸ்
டென்னிஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்
|1 Sept 2024 3:27 PM IST
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
நியூயார்க்,
ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-இந்தோனேசியாவின் அல்டிலா சுட்ஜியாடி ஜோடி, ஆஸ்திரேலியாவின் ஜான் பீர்ஸ்-செக் வீராங்கனை கத்ரினா சினிகோவா ஜோடியுடன் மோதியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் போபண்ணா ஜோடி 0-6, 7-6 (7-5), 10-7 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.