யுனைடெட் கோப்பை டென்னிஸ்; ஜோகோவிச்சின் செர்பிய அணி காலிறுதியில் தோல்வி...!
|யுனைடெட் கோப்பை டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
பெர்த்,
யுனைடெட் கோப்பை டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் டென்னிஸ் தரவரிசையில் நம்பர் 1 வீரரான ஜோகோவிச் தனது நாடான செர்பிய அணிக்கு கேப்டனாக செயல்படுகிறார்.
இதில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் செர்பியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
இதில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதினார். இதில் மணிக்கட்டு காயத்துடன் போராடிய ஜோகோவிச் 4-6 மற்றும் 4-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார். இதன் மூலம் செர்பிய அணி காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது.