< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அறுவை சிகிச்சைக்காக லஞ்சம் வாங்கிய எய்ம்ஸ் டாக்டர் இடமாற்றம்
|22 Sept 2022 8:42 AM IST
ஆஸ்பத்திரியில் கடந்த ஆண்டு தனது மகளின் அறுவை சிகிச்சைக்காக ஒரு டாக்டர் கேட்டதன்பேரில் இவர் ரூ.36 ஆயிரம் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது
புதுடெல்லி,
டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் பாதுகாவலராக பணிபுரிபவர் லால் சிங் சவுபே. அந்த ஆஸ்பத்திரியில் கடந்த ஆண்டு தனது மகளின் அறுவை சிகிச்சைக்காக ஒரு டாக்டர் கேட்டதன்பேரில் இவர் ரூ.36 ஆயிரம் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சக ஊழியர் ஒருவரின் அறிவுரையின் பேரில் பாதுகாவலர் லால் சிங் சவுபே, கடந்த ஜூன் மாதம் ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் புகார் அளித்தார். அதுதொடர்பாக ஆஸ்பத்திரியின் உண்மை கண்டறியும் குழு நடத்திய விசாரணையில் குற்றச்சாட்டு உண்மை என்பது தெரியவந்தது. அந்த டாக்டர், மற்றொரு நோயாளியிடமும் ரூ.34 ஆயிரம் லஞ்சம் பெற்றது தெரியவந்தது. அதையடுத்து அந்த டாக்டர் அரியானா மாநிலம் ஜஜ்ஜாரில் உள்ள தேசிய புற்றுநோய் நிறுவனத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.