< Back
டென்னிஸ்
பார்சிலோனா ஓபன்: இறுதிப் போட்டியில் சிட்சிபாஸ், கார்லோஸ் அல்காரஸ் மோதல்..!!

கோப்புப்படம்

டென்னிஸ்

பார்சிலோனா ஓபன்: இறுதிப் போட்டியில் சிட்சிபாஸ், கார்லோஸ் அல்காரஸ் மோதல்..!!

தினத்தந்தி
|
22 April 2023 11:00 PM IST

இன்று நடைபெற்ற 2வது அரையிறுதி ஆட்டத்தில் கார்லோஸ் அல்காரஸ் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

பார்சிலோனா,

ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் இன்று நடைபெற்ற 2வது அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், இங்கிலாந்தின் டான் ஈவன்சுடன் மோதினார். இதில் அல்காரஸ் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். நாளை இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் அல்காரஸ், சிட்சிபாசை எதிர்கொள்கிறார்.

முன்னதாக நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், இத்தாலியின் லாரன்சோ முசெட்டியுடன் மோதினார். இதில் முதல் செட்டை சிட்சிபாஸ் 6-4 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டை நீண்ட போராட்டத்துக்கு பின் முசெட்டி 7-5 என கைப்பற்றினார். இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை சிட்சிபாஸ் 6-3 என்ற கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தார்.

மேலும் செய்திகள்