< Back
டென்னிஸ்
டென்னிஸ்
ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய முன்னணி டென்னிஸ் வீராங்கனை
|22 Oct 2022 1:40 AM IST
டென்னிஸ் வீராங்கனை சிமோனா ஹாலெப் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தி இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
நியூயார்க்,
முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையும், தரவரிசையில் தற்போது 9-வது இடம் வகிப்பவருமான சிமோனா ஹாலெப் (ருமேனியா) , 'ரோக்சாடஸ்டட்' என்ற தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தி இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து அவர் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று அறிவித்தது. 31 வயதான ஹாலெப் பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் ஆகிய இரண்டு கிராண்ஸ்ட்லாம் பட்டங்களை வென்றவர் ஆவார்.
தான் வேண்டுமென்றே எந்த ஊக்கமருந்தையும் பயன்படுத்தவில்லை என்பதை நிரூபிக்கும் வரை போராடுவேன் என்று ஹாலெப் கூறியுள்ளார்.