< Back
டென்னிஸ்
டென்னிஸ்
சான் டியாகோ ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் இகா ஸ்வியாடெக்
|17 Oct 2022 10:21 PM IST
சான் டியாகோ ஓபன் இறுதி போட்டியில் இகா ஸ்வியாடெக் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றுள்ளார்.
சான் டியாகோ,
சான் டியாகோ ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் உலகின் முதல் நிலை வீராங்கனையான இகா ஸ்வியாடெக் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றுள்ளார்.
இறுதிப் போட்டியில் இகா ஸ்வியாடெக் (போலந்து), தரவரிசையில் 77-வது இடத்தில் இருந்த குரோஷியவின் டோனா வேகிக்கை எதிர்கொண்டார். இதில் இகா ஸ்வியாடெக், 6-3 3-6 6-0 என்ற கணக்கில் டோனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன் மூலம் ஆண்டின் எட்டாவது டபிள்யூ.டி.ஏ பட்டத்தை இகா ஸ்வியாடெக் வென்று உள்ளார்.