< Back
டென்னிஸ்
கனடா ஓபன் டென்னிஸ்; நம்பர் ஒன் வீரர் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி

Credit : Instagram@carlitosalcarazz

டென்னிஸ்

கனடா ஓபன் டென்னிஸ்; நம்பர் ஒன் வீரர் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி

தினத்தந்தி
|
12 Aug 2023 2:26 PM IST

டாமி பால், காலிறுதியில் நம்பர் ஒன் வீரரான கார்லோஸ் அல்காரஸை வீழ்த்தினார்.

டொராண்டோ,

கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொராண்டோ, மான்ட்ரியல் நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் விம்பிள்டன் சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான ஸ்பெயினைச் சேர்ந்த கார்லஸ் அல்காரஸ், அமெரிக்க வீரரான டாமி பால் உடன் மோதினார்.

இந்த போட்டியின் தொடக்கத்தில் டாமி பால் ஆதிக்கம் செலுத்தினார். முதல் செட்டை டாமி பால் 6-3 என்ற செட் கணக்கில் கைப்பற்றி அல்காரசுக்கு அதிர்ச்சி அளித்தார். அதில் இருந்து மீண்ட அல்காரஸ், 2-வது செட்டை போராடி கைப்பற்றினார்.

இருப்பினும் அவருக்கு தோல்வியே கிட்டியது. கடைசி செட்டையும் டாமி பால் கைப்பற்றினார். இந்த போட்டியில் டாமி பால் 6-3, 4-6 மற்றும் 6-3 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார். இதனால் நம்பர் ஒன் வீரர் அல்காரஸ் தொடரில் இருந்து வெளியேறினார்.

வெற்றி பெற்ற அமெரிக்க வீரர் டாமி பால் அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று டாமி பால், அரையிறுதி போட்டியில் இத்தாலி வீரரான ஜன்னிக் சின்னர் உடன் பலபரீட்சை நடத்த உள்ளார்.

மேலும் செய்திகள்