< Back
டென்னிஸ்
டென்னிஸ் வீராங்கனை ஹாலெப்புக்கு மூக்கில் ஆபரேஷன்
டென்னிஸ்

டென்னிஸ் வீராங்கனை ஹாலெப்புக்கு மூக்கில் ஆபரேஷன்

தினத்தந்தி
|
14 Sept 2022 1:59 AM IST

டென்னிஸ் வீராங்கனை சிமோனா ஹாலெப்புக்கு மூக்கில் ஆபரேஷன் செய்யப்பட்டு உள்ளது.

புச்சாரெஸ்ட்:

முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையும், 2 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான சிமோனா ஹாலெப் (ருமேனியா) மூக்கின் உள்பகுதியில் ஏற்பட்ட சில பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார். குறிப்பாக இரவு நேரத்தில் மூச்சு விடுவதில் சிரமப்பட்டார்.

இதனால் வேறு வழியின்றி அவருக்கு மூக்கில் ஆபரேஷன் செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'எல்லாமே சரியாக நடந்தது. சில வாரங்கள் ஓய்வுக்கு பிறகு பயிற்சியை தொடங்குவேன். விரைவில் உங்களை டென்னிஸ் களத்தில் சந்திக்கிறேன்' என்று குறிப்பிட்டு ஆஸ்பத்திரியில் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

தரவரிசையில் தற்போது 9-வது இடத்தில் உள்ள ஹாலெப் அமெரிக்க ஓபனில் முதல் சுற்றுடன் நடையை கட்டியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்