< Back
டென்னிஸ்
இந்தியாவில் டென்னிஸ் விளையாட்டு உயர்ந்து வருகிறது- ரோகன் போபண்ணா

image courtesy; AFP

டென்னிஸ்

"இந்தியாவில் டென்னிஸ் விளையாட்டு உயர்ந்து வருகிறது"- ரோகன் போபண்ணா

தினத்தந்தி
|
9 Oct 2023 9:56 AM IST

ஆசிய விளையாட்டு தொடரில் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ருதுஜா இணை தங்கப்பதக்கம் வென்று அசத்தியது.

ஹாங்சோவ்,

19-வது ஆசிய விளையாட்டு போட்டி கடந்த மாதம் 23-ந்தேதி சீனாவின் ஹாங்சோவ் நகரில் தொடங்கியது. 45 நாடுகளை சேர்ந்த 12,407 வீரர், வீராங்கனைகள் 40 வகையான போட்டிகளில் பங்கேற்றனர். இதில் இந்தியாவின் 661 வீரர்களும் அடங்குவர். 15 நாட்களாக நடைபெற்ற இந்த விளையாட்டு போட்டி நேற்று நிறைவடைந்தது.

இதில் பதக்கப்பட்டியலில் முதல்முறையாக 100-ஐ தாண்டி சரித்திரம் படைத்த இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என்று மொத்தம் 107 பதக்கங்களுடன் 4-வது இடம் பிடித்தது. ஆசிய விளையாட்டில் இந்தியாவின் ஆகச்சிறந்த செயல்பாடு இதுவாகும்.

இந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் டென்னிசின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ருதுஜா இணை தங்கப்பதக்கம் வென்று அசத்தியது.

தன்னுடைய கடைசி ஆசிய விளையாட்டு போட்டியில் விளையாடிய ரோகன் போபண்ணா பதக்கம் வென்ற பிறகு அளித்த பேட்டியில் , 'மிகவும் பெருமையாக உள்ளது. இந்தியாவில் விளையாட்டுகள் வளர்ந்து வருவதாக நான் நினைக்கிறேன். டென்னிஸ் விளையாட்டு அதிகரித்து வருகிறது. டென்னிசில் தங்கப்பதக்கம் பெறுவது ருதுஜாவுக்கும் எனக்கும் மிகவும் பெரிய தருணம். நான் அடுத்த ஆசிய விளையாட்டுகளில் விளையாடப் போவதில்லை. வெற்றியுடன் ஓய்வு பெறுவது மகிழ்ச்சியாக உள்ளது' என்று கூறினார்.

மேலும் செய்திகள்