< Back
டென்னிஸ்
டென்னிஸ் சாம்பியன்ஷிப்: டேனியல் மெத்வதேவ் வெற்றி!

image courtesy; AFP

டென்னிஸ்

டென்னிஸ் சாம்பியன்ஷிப்: டேனியல் மெத்வதேவ் வெற்றி!

தினத்தந்தி
|
16 Nov 2023 1:03 PM IST

'ரெட்' பிரிவில் டேனியல் மெத்வதேவ் முதலிடத்திலும், அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 2-வது இடத்திலும் உள்ளனர்.

துரின்,

தரவரிசையில் முதல் 8 இடம் வகிக்கும் வீரர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள வீரர்கள் ரெட், கிரீன் என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வீரரும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். 'ரவுன்ட்-ராபின்' முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிப்போர் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள்.

இதில் 'ரெட்' பிரிவில் இடம் பெற்றுள்ள ரஷிய வீரரான டேனியல் மெத்வதேவ், ஜெர்மனியை சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரேவ் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் மெத்வதேவ் 7-6 மற்றும் 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்றார்.

இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் 'ரெட்' பிரிவில் டேனியல் மெத்வதேவ் முதலிடத்திலும், அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 2-வது இடத்திலும் உள்ளனர். 'கிரீன்' பிரிவில் சின்னர் முதலிடத்திலும், ஜோகோவிச் 2-வது இடத்திலும் உள்ளனர்.

மேலும் செய்திகள்