< Back
டென்னிஸ்
டென்னிஸ்
டெல் அவிவ் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் - ஆஸ்திரிய வீரர் டொமினிக் 2-ம் சுற்றுக்கு முன்னேற்றம்
|27 Sept 2022 4:36 PM IST
டெல் அவிவ் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரில் ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீம் 2-ம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
டெல் அவிவ்,
டெல் அவிவ் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் செர்பிய வீரர் லாஸ்லோ டெர் உடன் ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீம் மோதினார்.
தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 5-7, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் டொமினிக் தீம் வெற்றி பெற்று, தொடரின் 2-ம் சுற்றுக்குள் நுழைந்தார்.