< Back
டென்னிஸ்
டென்னிஸ்
மராட்டிய ஓபன் டென்னிஸ்: நெதர்லாந்து வீரர் 'சாம்பியன்'
|8 Jan 2023 1:27 AM IST
மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் நெதர்லாந்து வீரர் டாலோன் கிரிக்ஸ்பூர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
5-வது மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் இறுதிப்போட்டியில் தரவரிசையில் 95-வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து வீரர் டாலோன் கிரிக்ஸ்பூர் 4-6, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் சரிவில் இருந்து மீண்டு வந்து பிரான்ஸ் வீரர் பெஞ்சமின் போன்ஜியை வீழ்த்தி முதல்முறையாக ஏ.டி.பி.சர்வதேச போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அவருக்கு ரூ.88 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் பெல்ஜியத்தின் சாண்டெர் கில்லி-ஜோரான் லீஜென் ஜோடி 6-4, 6-4 என்ற நேர்செட்டில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்-ஸ்ரீராம் பாலாஜி (இருவரும் தமிழ்நாடு) இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது.