< Back
டென்னிஸ்
டென்னிஸ்
ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் தோல்வி கண்ட சுமித் நாகல்
|19 July 2024 1:58 PM IST
ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் சுமித் நாகல் 2வது சுற்றில் தோல்வி கண்டு வெளியேறினார்.
ஸ்வீடன்,
ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சுமித் நாகல், அர்ஜெண்டினாவின் மரியானோ நவோன் உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட சுமித் நாகல் 4-6, 2-6 என்ற செட் கணக்கில் அர்ஜெண்டினாவின் மரியானோ நவோமிடம் தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.
இன்று நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் மரியானோ நவோன், முன்னணி வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் உடன் மோத உள்ளார்.