< Back
டென்னிஸ்
டென்னிஸ்
ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ்; அரையிறுதிக்கு முன்னேறினார் நுனோ போர்ஹெஸ்
|20 July 2024 1:54 PM IST
ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.
ஸ்வீடன்,
ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் கஜகஸ்தானின் டிமோபி ஸ்கடோவ், போர்ச்சுகலின் நுனோ போர்ஹெஸ் உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நுனோ போர்ஹெஸ் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் கஜகஸ்தானின் டிமோபி ஸ்கடோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.