< Back
டென்னிஸ்
டென்னிஸ்
ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்ட கேஸ்பர் ரூட்
|17 July 2024 8:57 PM IST
ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.
ஸ்வீடன்,
ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான நார்வேயின் கேஸ்பர் ரூட், பிரேசிலின் தியாகோ மான்டீரோ உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் எளிதில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட கேஸ்பர் ரூட் யாரும் எதிர்பார்க்கா வண்ணம் 3-6, 3-6 என்ற நேர் செட் கணக்கில் தியாகோ மான்டீரோவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார். வெற்றி பெற்ற தியாகோ மான்டீரோ காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.