< Back
டென்னிஸ்
டென்னிஸ்
ஏ.டி.பி. சேலஞ்சர்ஸ் டென்னிஸ்: இந்திய வீரர் சுமித் நாகல் சாம்பியன்
|24 July 2023 3:41 AM IST
ஏ.டி.பி. சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் சுமித் நாகல் சாம்பியன் பட்டம் வென்றார்.
புதுடெல்லி,
தாம்பெர் ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டி பின்லாந்தில் நடந்தது.
இதன் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சுமித் நாகல், செக்குடியரசு வீரர் டலிபோர் ஸ்விர்சினாவுடன் மோதினார். இந்த போட்டியில் சுமித் நாகல் 6-4, 7-5 என்ற நேர் செட்டில் டலிபோர் ஸ்விர்சினாவை வீழ்த்தி கோப்பையை வென்றார். சுமித் நாகலின் 4-வது ஏ.டி.பி. சேலஞ்சர்ஸ் கோப்பை இதுவாகும்.