< Back
டென்னிஸ்
டென்னிஸ்
ஸ்டட்கார்ட் ஓபன் டென்னிஸ்; சாம்பியன் பட்டம் வென்றார் ரைபகினா
|22 April 2024 9:19 AM IST
இறுதி ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான ரைபகினா (கஜகஸ்தான்), உக்ரைனின் மார்டா கோஸ்ட்யுக் உடன் மோதினார்.
ஸ்டட்கார்ட்,
முன்னணி வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ள ஸ்டட்கார்ட் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான ரைபகினா (கஜகஸ்தான்), உக்ரைனின் மார்டா கோஸ்ட்யுக் உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட ரைபகினா 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் மார்டா கோஸ்ட்யுக்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.