< Back
டென்னிஸ்
ஸ்டட்கார்ட் ஓபன் டென்னிஸ்: ரைபகினா அரையிறுதிக்கு முன்னேற்றம்

image courtesy; AFP

டென்னிஸ்

ஸ்டட்கார்ட் ஓபன் டென்னிஸ்: ரைபகினா அரையிறுதிக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
20 April 2024 2:37 PM IST

ரைபகினா அரையிறுதியில் முன்னணி வீராங்கனையான இகா ஸ்வியாடெக் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

ஸ்டட்கார்ட்,

முன்னணி வீராங்கனைகள் ஸ்டட்கார்ட் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான ரைபகினா (கஜகஸ்தான்), ஜாஸ்மின் பவுலினி (இத்தாலி) உடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் இரு செட்டுகளை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றினர். இதனையடுத்து நடைபெற்ற 3-வது செட்டை ரைபகினா கைப்பற்றி வெற்றி பெற்றார்.

இந்த ஆட்டத்தில் ரைபகினா 6-3, 5-7 மற்றும் 6-3 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். இவர் அரையிறுதியில் இகா ஸ்வியாடெக் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

இதில் நடைபெறும் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் வாண்ட்ரூசோவா - மார்டா கோஸ்ட்யுக் மோதுகின்றனர்.

மேலும் செய்திகள்