'ஸ்டார் கன்டென்டர்' சாம்பியன்ஷிப் போட்டி: ஒற்றையர் பிரிவில் சீனா சாம்பியன்
|ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் சீனா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
கோவா,
உலக டேபிள் டென்னிஸ் 'ஸ்டார் கன்டென்டர்' சாம்பியன்ஷிப் போட்டி கோவாவில் நடந்து வருகிறது. கடைசி நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 7-வது இடம் வகிக்கும் சீனாவின் லியாங் ஜிங்குன் 11-6, 9-11, 10-12, 12-10, 12-10, 11-9 என்ற செட் கணக்கில் சக நாட்டவர் லின் ஷிடோங்கை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கினார்.
இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் நீடித்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-ம் நிலை வீராங்கனை சீனாவின் வாங் யிடி 11-6, 11-6, 11-8, 11-4 என்ற நேர்செட்டில் செங் ஐ சிங்கை வீழ்த்தி கோப்பையை வசப்படுத்தினார்.
ஆண்கள் இரட்டையரில் தென்கொரியாவின் அன் ஜாவ்யின்-சோ செங்மின் ஜோடியும், பெண்கள் இரட்டையர் பிரிவில் ஜப்பானின் மிகா ஹரிமோட்டோ-மியு நாகாசாகி இணையும் சாம்பியன் பட்டத்தை வென்றன.
கவுரவமிக்க இந்த போட்டியை இந்தியா நடத்தினாலும், இந்தியர்கள் யாரும் கால்இறுதியை கூட தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.