< Back
டென்னிஸ்
டென்னிஸ்
ஹாலே ஓபன் டென்னிஸ்: ஜானிக் சின்னர் சாம்பியன்
|23 Jun 2024 10:19 PM IST
ஹாலே ஓபன் டென்னிசில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார்.
பெர்லின்,
ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்றது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், போலந்து வீரர் ஹர்காக்ஸ் உடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், சின்னர் 7-6 (10-8), 7-6 (7-2) என்ற செட் கணக்கில் ஹர்காக்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். ஜானிக் சின்னர் தரவரிசையில் முதலிடம் பெற்ற பிறகு வென்ற முதல் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.