< Back
டென்னிஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டி: சினெர் - பிரிட்ஸ் பலப்பரீட்சை
டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டி: சினெர் - பிரிட்ஸ் பலப்பரீட்சை

தினத்தந்தி
|
8 Sept 2024 4:22 PM IST

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.

நியூயார்க்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. ஜோகோவிச், அல்காரஸ் உள்பட பல முன்னணி வீரர்கள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டிக்கு நம்பர் 1 வீரரான ஜானிக் சினெர் (இத்தாலி) மற்றும் 12-ம் நிலை வீரரான டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா) இருவரும் முன்னேறியுள்ளனர்.

இதனையடுத்து இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 1.30 மணிக்கு அரங்கேறும் இறுதிப்போட்டியில் சினெர்- டெய்லர் பிரிட்ஸ் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

மேலும் செய்திகள்