< Back
டென்னிஸ்
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்; டிமிட்ரோவ் காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்..!!

image courtesy;AFP

டென்னிஸ்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்; டிமிட்ரோவ் காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்..!!

தினத்தந்தி
|
12 Oct 2023 12:01 PM IST

டிமிட்ரோவ் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அல்காரசை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

ஷாங்காய்,

12-வது ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

இதில் நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் ஒன்றில் டென்னிஸ் தரவரிசையில் 2-ம் நிலை வீரரான இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கார்லஸ் அல்காரஸ் பல்கேரிய வீரரான கிரிகர் டிமிட்ரோவ் உடன் மோதினார்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை அல்காரஸ் கைப்பற்றினார். பின்னர் எழுச்சி பெற்ற டிமிட்ரோவ் அதிரடியாக விளையாடி அடுத்த 2 செட்டுகளை கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்த ஆட்டத்தில் டிமிட்ரோவ் 5-7, 6-2 மற்றும் 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

டிமிட்ரோவ் காலிறுதியில் சிலி நாட்டை சேர்ந்த நிக்கோலஸ் ஜாரி உடன் விளையாட உள்ளார்.

மேலும் செய்திகள்