< Back
டென்னிஸ்
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறினார் டேனியல் மெத்வதேவ்

Image Courtesy: AFP

டென்னிஸ்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறினார் டேனியல் மெத்வதேவ்

தினத்தந்தி
|
6 Oct 2024 2:00 PM IST

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

பீஜிங்,

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 3வது சுற்று (ரவுண்ட் ஆப் 32) ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ரஷியாவின் டேனியல் மெத்வதேவ், இத்தாலியின் மேட்டியோ அர்னால்டி உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 7-5 என்ற புள்ளிக்கணக்கில் மேட்டியோ அர்னால்டி கைப்பற்றினார். இதையடுத்து தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய மெத்வதேவ் அடுத்த இரு செட்களை 6-4, 6-4 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார்.

இறுதியில் இந்த ஆட்டத்தில் 5-7, 6-4, 6-4 என்ற புள்ளிக்கணக்கில் மேட்டியோ அர்னால்டியை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் மெத்வதேவ் 4வது சுற்றுக்கு (ரவுண்ட் ஆப் 16) முன்னேறினார்.

மேலும் செய்திகள்